யாழ்ப்பாண மாவட்ட மகளிர் அமைப்பின் எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம், நாட்டின் வலுவான பெண் சமுதாயத்தினை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் இன்று யாழ்ப்பாண பல்கலைகழக பரமேஸ்வர சந்தியில் முன்பாக கவனீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் துரிதமான நீதி வேண்டும், பெண்களுக்கு ஏதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற அனுமதிக்கமாட்டோம் என்ற வாசகத்துடன் பதாகைகள் ஏந்திவண்ணம் தலையில் கறுப்புபட்டி அணிந்த வண்ணம் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்
இதில் மகளிர் அமைப்பினர்கள், சிவில் சமூக செயற் பாட்டாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்