உள்நாடு

கனடா கொலை சம்பவம்: 19 வயது இலங்கையர் அதிரடியாக கைது

கனடாவில் கொல்லப்பட்ட ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர்.

குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விடயமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து தாயும் அவரது நான்கு பிள்ளைகளும். அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க என்ற பெண்ணும் அவரது ஏழு வயதுடைய மகனும், நான்கு வயதுடைய மகளும், இரண்டு வயதுடைய மகளும், இரண்டு மாத குழந்தையும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி கொலைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இது பயங்கரமான வன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அதிபர்கள் இடமாற்றல் முறைமையில் எழுந்துள்ள சிக்கல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபை தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு.

editor