உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின செய்தி!

தாயின் அரவணைப்பு, சகோதரியின் பாசம், மனைவியின் நேசம், மகளின் அன்பு என அனைத்தையும் சமமாக அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததால், பெண்ணின் தைரியம், பலம், உறுதிப்பாடு எப்படி இருக்கும் என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

பண்டைய காலத்திலிருந்தே மனிதகுலத்தின் நிலையான இருப்பானது வலுவூட்டப்பட்ட பெண்களின் வலிமையைப் பொறுத்தாக இருந்தது என்பது நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 52% பெண்கள் மற்றும் அந்தப் பெண்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% நேரடியாகப் பங்களிக்கின்றனர். பிறந்தது முதல் பல்வேறு வகிபாத்திரங்களை ஏற்று இந்த உலகை அழகுறச் செய்ய பெண்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் மறக்க முடியாது.

குழுந்தையாக வீட்டையும், இளம் பெண்ணாக உலகையும் , மனைவியாக குடும்பத்தையும் அழகுபடுத்தும் பெண்ணின் தவிர்க்கமுடியாத தைரியமும் வலிமையும், வீழ்ச்சியடைந்த நம் நாட்டை மீண்டும் நம்பர் 1 க்கு மீட்டெடுக்கும் பயணத்தின் உயிர்நாடியாக மாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், நாடு என்ற வகையில் நாம் இன்னும் பெண்களின் தைரியத்தையும், வலிமையையும் புரிந்து கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டும். பாரம்பரிய கருத்துக்கள் மற்றும் அடிப்படைக் கருத்துக்களின் பேரிலேயே நாம் இன்னும் பெண்களை நோக்குகின்றோம். இந்த மனோபாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

புதிய உலகிற்கு ஏற்ற அறிவு, தொழில்நுட்பம் மற்றும் பரந்த திறன்களால் பெண்கள் வலுவூட்டப்பட்டு, குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக பெண்கள் இருக்க வேண்டும். வீட்டிலும், வீதியிலும், தொழில் புரியும் இடத்திலும் பெண்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க நாம் செயற்படல் வேண்டும். அப்போதுதான் உண்மையான பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்

Related posts

பாணின் விலை குறைப்பு

சீரற்ற காலநிலை: பலர் உயிரிழப்பு- வளிமண்டலவியல் திணைகளம் விடுத்த எச்சரிக்கை

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!