உள்நாடு

முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிக்கும் முஷாரப்பை வன்மையாக கண்டிக்கின்றேன் – அப்துல் மனாப்

நேற்றைய (6) பாராளுமன்ற உரையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் பற்றியும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான பல பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளருமான எம்.ஐ.அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.

ஜனாஸா எரிப்பின் போதும் எமது சமூகம் துன்பப்படும் போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் அரசாங்கத்தின் ஒட்டுண்ணி யாகவும் அரச சுகபோகங்களை அனுபவித்துவிட்டு கட்சியின் தீர்மானங்களை மீறி செயல்பட்டு விட்டு தற்போது தன்னை ஒரு உத்தமன் போல காட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதும் போலியான ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றார்.

தொடர்ந்து இது போன்ற போலி காரணங்களை சொல்லி மக்களை மடயர்களாக்கி வாக்குகளை பெறலாம் என பகல் கனவில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எமது மக்கள் எதிர்வரும் காலங்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கடன் தொல்லையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது கட்சிக்குள் அழைத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினரானவர் மக்களின் பண உதவியாள்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஆனேன் என்பதே முதலாவது பொய்; பள்ளிவாசலில் வைத்து அல்லாஹ் மீது சத்தியம் செய்துவிட்டு தனக்கு வாக்களித்த சொந்த ஊர் மக்கள் முன்னிலையிலே அல்லாஹ்வையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதி தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக தலைவர் மீதும் கட்சியின் மீதும் பொய்யான காரணங்களை கூறி தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கிறார்.

தீர்வே விடிவு என மக்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அண்மையில் கூட தனது தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் முஸ்லிம் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு ஆங்கிலம், சிங்கள மொழிகளில் புலமை இல்லாததன் காரணமாக அவர்களை அமைச்சுக்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்க முடியாமல் உள்ளது என பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம்சாட்டி எமது மக்களை மடையர்கள் காட்ட எத்தனித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

பசில் மீண்டும் சேவையில்

அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க முடியாது.