இந்தியன் இழுவை மடி படகையும் உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடுக்க கோரி யாழில் மீனவர்கள் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த போராட்டம் ஆளுநர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் இந்திய துணை தூதரகம் வரை பேரணியாக சென்று மகஜர் ஒன்றை கையளிக்கச் சென்றவேளை அங்கு போலீசாரால் தடுக்கப்பட்டு ஐவர் மட்டும் தூதாக அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்திய துணை தூதரகத்தில் மகஜரும் கையளிக்கப்பட்டது.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஏற்பாடு செய்த இப் போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமார, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மகா சபை தலைவர் இ.முரளிதரன், வடமாகாண மீனவர் அமைப்பு பிரதிநிதிகள், வட மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள், பூந்தளிர் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள், கிராமிய உழைப்பாளர் சங்க பிரதிநிதிகள்,
சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.