உள்நாடு

சாந்தனை நிரபராதி என ஒப்புக்கொண்ட நீதிபதி: இந்தியா மீது குற்றச்சாட்டும் புகழேந்தி…!

ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் சாந்தன் தரப்பினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பு வழங்கிய போதும் அது நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சாந்தனின் இறுதி ஊர்வலத்தின் போது ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்நீத்த மாவீரன் சாந்தன் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலே அடைக்கபட்டிருந்தார்.
இந்த வழக்கிலே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய் என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.
குறிப்பாக சாந்தன் சம்பவ இடத்திற்கு சென்றதாக குற்றச்சாட்டு இல்லை எனவும் சாந்தன் சம்பவ நேரத்தில் சென்னையில் இருந்ததாவும் இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.
மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர், மரணதண்டனை வழங்கியவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மதம் இல்லை நான் விடுதலை செய்கின்றேன் என்று சொன்னார்.
ஆனால் பெரும்பான்மையின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

ரம்பாவால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம்!

நோயில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு