உள்நாடு

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!
மண்ணினுள் மறைத்து வைத்து 146 பாலை மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைதடி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்திய டிப்பரும் பறிமுதல் செய்யப்பட்டது.
முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்ட வேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பொ.ஜெயரூபன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு

தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக பயன்படுத்தியிருக்கின்றேன் – மங்கள

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு