உள்நாடுசூடான செய்திகள் 1

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 5ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்சுமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள் பாதுகாப்பு சட்ட மூலம் தொடர்பில் சபாநாயகர் பின்பற்றிய அணுகுமுறையை எதிர்த்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

பிரதமருக்கும் இந்திய இராணுவ தலைமை அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

இந்தியா சென்றார் முன்னாள் ஜனாதிபதி

வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று