உள்நாடு

யாழ், கிளிநொச்சியில் படையினரினால் விடுவிக்கப்படும் 164 ஏக்கர் காணி

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்கப் படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்குக் காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர்,  படைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இருந்து  59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படும் அதேநேரம்  கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன

Related posts

வனஜீவராசி அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் களமிறங்கியே தீருவார்- மொட்டு அமைச்சர்

வாகனங்களை பதிவு செய்வதற்கு TIN எண் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்..!