உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடகசெயலாளர் சஞ்ஜய் நல்லப்பெரும தெரிவித்துள்ளார்

இந்த விடயம் தொடர்பாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்

ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டம் கொழும்பில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 மாதங்களில் ஆயிரம் தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

எமது கொள்கைளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்