உள்நாடுசூடான செய்திகள் 1

சபைக்கு வர மாட்டேன்- சிறையிலிருந்து கெஹலிய

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், சுகவீனம் காரணமாக அவர் பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, அவரது செயலாளர் ஒருவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, சபாநாயகரின் பணிப்புரையின் பேரில், அவரை பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சார்ஜன்ட் தயாரித்திருந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரம்புக்வெல்ல திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறை ஆணையாளருக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்பஹாவிற்கு நீர் வெட்டு

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

புதிய கசினோ உரிமம் பத்திரம் குறித்து ஹர்ஷ எச்சரிக்கை