உள்நாடு

IMF குழு மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுமார் இரண்டு வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை முன்னெடுப்பார்கள்.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் நிறைவு செய்யப்பட்டுள்ள ஏனைய வாக்குறுதிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இணக்கப்பாடு கிடைக்கப்பெற வேண்டும்

அதன்பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு மற்றும் வருவாய் இலக்குகள் நிறைவு செய்யப்பட்டிருப்பின், இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பின் இரண்டாவது மீளாய்வு இந்த வருடத்தின் முதல் பாதியில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு மீதான முதல் மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகரித்தது.

இதனையடுத்து, நாட்டின் நிதி நெருக்கடியின் வீழ்ச்சியைச் சமாளிப்பதற்கான பிணையெடுப்பு பொதியின் இரண்டாவது தவணையாக 337 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டது.

Related posts

தப்பிச் சென்ற நோயாளி சிக்கினார் [UPDATE]

தாழமுக்கம் 24 மணித்தியாலத்தில் வடக்கை அண்டியதாக கடக்கும்

editor

சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்