உள்நாடு

நவீன வசதிகளுடன் பண்டாரவளை ரயில் நிலையம் திறப்பு!

பண்டாரவளை புகையிரத நிலையத்தில் புதிய புகையிரத பாதை உபகரண அறை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஓய்வு அறை மற்றும் உணவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கட்டிடத் தொகுதியை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் கையளிக்கப்பட்டது.

இலங்கையின் மிகவும் கவர்ச்சிகரமான ரயில் நிலையங்களில் ஒன்றான பண்டாரவளை ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ரயில்வே திணைக்களம் இந்தப் புதிய கட்டிடத் தொகுதியை நிர்மாணித்துள்ளது.

குறித்த ரயில் நிலையமானது 1893 இல் நிறுவப்பட்டது.

 

Related posts

கோடிக்கணக்கில் நஷ்டத்தில் சதொச! நடக்கப்போவது என்ன?

பிசிஆர் – ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டு

நீர் வழங்கல் சபை விடுத்த – விசேட அறிவிப்பு!