உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

(UTV | கொழும்பு) –

2023ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் நடாத்திய கிராத் போட்டியின் முதலாம் கட்ட பரிசளிப்பு விழா பெப்ரவரி 17ஆம் திகதி திருகோணமலை, மூதூர் ஸாரா மண்டபத்தில் இடம்பெற்றது.

600 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் முதல் 112 இடங்களை நடுவர்களின் தீர்ப்பின் மூலம் வெற்றிபெற்றவர்களின் வீடியோக்களை எமது UTV HD யூடியுப் பக்கத்தில் வாக்களிப்புக்கு விட்டு அதில் முதலாமிடம் பெற்ற மூதூரைச்சேர்ந்த உம்மு சுலைம் என்ற மாணவிக்கான கணனி வழங்கி வைக்கப்பட்டதுடன். 2ஆம் இடத்தை தட்டிய மூதூரைச் சேர்ந்த மர்யம் ஷாதா என்ற மாணவிக்கும்  பணப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உள்ளிட்டோருடன் அப்பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வயது பிரிவுகளின் அடிப்படையில், 1,2,3ஆம் இடங்களை பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு மிக விரைவில் இடம்பெறும்.  

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுமன்னிப்பு காலத்திற்குள் 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைவு

இந்தியா கொரோனா இலங்கையில் அடையாளம்

மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கும் காசா மக்கள் – என்.சிறீகாந்தா.