உள்நாடு

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த சாய்ந்தமருது பர்ஷான்க்கு கௌரவம்

(UTV | கொழும்பு) –

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த எம். எஸ். எம். பர்சான்   கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (23) இரவு   கௌரவிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்ததாக உலகின் 26 நாடுகளில் வியாபித்திருக்கும் சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முன்னிலையில் எம்.எஸ்.எம். பர்சானினால் புலனுறுப்புகளால் புரியப்பட்ட சாதனைகளை உலக சாதனையாளர்களை பதியும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார்.இவர்   கண், காது, மூக்கு , வாய் ஆகிய புலனுறுப்புகளால்  அபார சாதனையை மேற்கொண்டு பார்வையாளர்களை வியப்பில்  ஆழ்த்துவதுடன் காதினால் பலூனை ஊதி உடைத்தல் , கண்களினால் இரும்பு கம்பியினை வளைத்தல் , பல்லினால் 5.7 கிலோ கிறாம் பாரத்தினை சங்கிலிகளின் உதவியுடன் உயர்த்துதல் ,குளிர்பானத்தை முக்குத்துவாரத்தினூடாக அருந்துதல் , மூக்கு துவாரத்தினூடாக வயரை செலுத்தி வாயினூடாக எடுத்து மின் குமிழை எரியச் செய்தல், பல்லினால் தேங்காய் உரித்தல் போன்ற செயற்பாடுகளை 12 நிமிடத்தில் மேற்கொண்டு சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்
சர்வதேசம் சென்று சோழன் உலக சாதனை புத்தகத்தில் பெயரை பதித்த சாய்ந்தமருது பர்ஷான் இச் சாதனை மூலம் தாய் நாட்டுக்கும் , பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்ததையிட்டு கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நசீர், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் பிரதி தவிசாளர் எம்.யுனைதீன் (மான்குட்டி)  , நிதிப் பணிப்பாளர் முன்னாள் சாய்ந்தமது பிரதேச செயலாளர் ஏ.எல்.எ.சலீம் நிர்வாக பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம். பைசர்உள்ளிட்ட   கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Related posts

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

திடீர் சுகாயீனம் காரணமாக 05 பேர் பலி – யாழில் பரவும் மர்ம காய்ச்சல்

editor

பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்