உள்நாடு

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்படி, 10 வருடங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், உரிய பிரேரணையை தயாரிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்

வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று முதல் மாற்றம்

அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவும்