(UTV | கொழும்பு) – விஷேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர் மாத்திரமே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 340 விசேட வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்பட்டதாகவும் தற்போது சுமார் 400 விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்காக நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්