உள்நாடு

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

(UTV | கொழும்பு) – அண்மையில் 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுக்கு எதிரான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது,

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அடிப்படை உரிமை மனு, குமுதினி விக்ரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

பிரதிவாதியான மின்சக்தி அமைச்சர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தங்களது சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மூன்று வார கால அவகாசம் கோரியுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

சுகாதார துறையில் எழுந்துள்ள பாரிய சிக்கல்!

ஆசிரியர் சேவைக்கான நேர் முகப்பரீட்சை ஒத்திவைப்பு