உள்நாடு

கொழும்பில் வயோதிபர்களுக்கான சன சமூக நிலையம் திறப்பு !

(UTV | கொழும்பு) –    கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு பயன்படும் வகையில் சனசமூக நிலையம் ஒன்றினை அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சனசமூக நிலையத்தில் ஓவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மதிய உணவினை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்திற்கு அமைவாக குறைந்தது 300 நபர்கள் இந்த சனசமூக நிலையித்தில் வெள்ளிக்கிழமை தோறும் உணவருந்தி செல்லக்கூடிய முழுமையான ஏற்பாட்டினை ஐடிஎம் கல்வி நிறுவனத்தின் அதிபரும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கலாநிதி ஜனகன் அவர்கள் மேற்கொண்டுள்ளார். இதனை கியூ லேன் BRO எனப்படும் அனுசன் அவர்கள் ஜனகனின் இணைப்பாளராக முழுமையாக இந்த ஏற்பாடுகளை கவனிப்பார் என இதனை திறந்து வைக்கும் நிகழ்வில் கலாநிதி ஜனகன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இங்கு அவர் மேலும் குறிப்பிடும் போது, இந்த நிலையித்தில் நாளாந்த பத்திரிகைகளும் தொலைக்காட்சி வசதிகளும் வயோதிபர்கள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளன என்றார். இந்த திட்டத்தினை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வரவேற்று உற்சாக வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது…

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுகாதார அமைச்சின் அறிவிப்பு

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]