(UTV | கொழும்பு) – இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது.
இந்த தடைக்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை எனவும் இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் பெரிய வெங்காயத்தை வாங்குவதற்கு மற்ற சந்தைகளை நாடுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், இலங்கை போன்ற நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து, டிசம்பர் 8, 2023 அன்று ஏற்றுமதியைத் தடை செய்தது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්