உள்நாடு

72 சுகாதார தொழிற்சங்கங்களில் பண பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது!

(UTV | கொழும்பு) –  72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(14) தொடர்கின்றது.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று(13) காலை 6.30 முதல் முதல் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட நிபுணர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

சிறுவர், புற்றுநோய், சிறுநீரக மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், வைத்தியசாலை சேவைகளில் இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.

போராட்டம் நடைபெறும் பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்காது

தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த புதிய பாடதிட்டம் அவசியம்