(UTV | கொழும்பு) – 72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சில் நேற்று(12) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத் துறையிலுள்ள வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 35,000 ரூபா கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி 72 தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னரும் இருதடவைகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன.
சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவைப்படும் பட்சத்தில் இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්