உள்நாடு

Scan Jumbo Bonanza 2023 : விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்

(UTV | கொழும்பு) –

 

C.W. Mackie PLC ,இன் FMCG பிரிவான SCAN தயாரிப்புகள் பிரிவின் முதன்மையான வர்த்தக நாமங்களில் ஒன்றான Scan Jumbo Peanut, சமீபத்தில் 7வது முறையாக ‘ஸ்கேன் ஜம்போ பொனான்சா’ நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை நிறைவு செய்தது.

இதில் 50 அதிர்ஷ்டசாலிகள் மவுன்டன் சைக்கிள்களைப் பெற்றனர். இந்நிகழ்வு 2024 ஜனவரி 23 அன்று கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் (GOH) 50 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள், சிரேஷ்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் பிற நலன் விரும்பிகள் முன்னிலையில் நடைபெற்றது.

22 ஜூன் 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரை மூன்று மாதங்களுக்கும் மேலாக 120 நகரங்களுக்கு மேல் இந்த ஊக்குவிப்புத் திட்டம் நடைபெற்றது, வாடிக்கையாளர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ் இன் வெற்றுப் பொதியை தங்கள் பெயர், முகவரி மற்றும் தே.அ.அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு இலக்கத்துடன் P.O. Box 161, Colombo என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Scan Jumbo Bonanza என்பது பல ஆண்டுகளாக தங்களுக்குப் விருப்பமான வர்த்தக நாமத்தை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.

‘ஸ்கேன் ஜம்போ பொனான்சாவின் எண்ணககருவின் பின்னணியில் உள்ள நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகநாமத்தின் மீதான விசுவாசத்திற்காக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதைத் தெரிவிப்பதாகும்.

இந்த ஆண்டு ஜம்போ பொனான்சா ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றதோடு C.W. Mackie எதிர்காலத்தில் அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மேலும் தரமான முன்முயற்சிகளை வழங்க தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம் என C.W. Mackie PLC Group of Company இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவி பொது முகாமையாளர் அருண சேனாநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில், இவ் ஊக்குவிப்புத் திட்டம் அதிவேகமாக பிரபலம் அடைந்துள்ளது, மேலும் வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சியைக் காணும் என அவர்கள் நம்புகிறார்கள்.

ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ் 70 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ள பிரிவில் முன்னணியில் உள்ளது.

வேர்க்கடலை அவற்றின் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் பதப்படுத்தப்பட்டு, சுகாதாரமான நிலையில் நம்பகமான ஸ்கேன் லேபிளின் கீழ் தொகுக்கப்படுகிறது.

இந்த வர்த்தகநாமம் அனைத்து வயது நுகர்வோர் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ளது, இது தரமான வேர்க்கடலை வழங்குவதில் நற்பெயரைப் பெற்றுள்ளது.

இது சந்தையில் அதன் வெற்றிக்கும் பிரபலத்திற்கும் பங்களித்தது. தரம் மற்றும் சுகாதாரத் தரங்களுக்கான அதன் அர்ப்பணிப்பு சந்தையில் அதன் மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது.

120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டு,C.W. Mackie PLC என்பது கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

இது எங்கள் பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பரந்த அளவிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல் மற்றும் இறக்குமதி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது.

பன்முகப்படுத்தப்பட்ட வணிக நிறுவனமான C.W. Mackie PLC இன் FMCG பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவு, அதன் கலப்பின செங்குத்து சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக சேனல்களுடன், பாரம்பரிய வர்த்தகம், நவீன வர்த்தகம், HORECA உணவு சேவைத் துறை சேனல் மற்றும் நிறுவனம்சார் விநியோகத்துடன் பல்வேறு நுகர்வோர் சந்தைகளுக்குள் ஊடுருவுகிறது.

அதன் தயாரிப்பு வர்த்தகநாம போர்ட்ஃபோலியோவில் Sunquick, Scan Jumbo Peanuts, Scan Snacks, Kotagala Kahata, Delish Jelly ஸ்கேன் வரத்தக நாம போத்தல் தண்ணீர், KVC தயாரிப்புகள் (பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்), N-Joy தேங்காய் எண்ணெய் மற்றும் ஸ்டார் பிராண்ட் எசன்ஸ் மற்றும் கலரிங்ஸ் போன்ற நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமங்கள் உள்ளன.

இலங்கை நுகர்வோரின் இதயங்களை வெல்வதோடு, அந்தந்த வகைகளில் சந்தையில் முன்னணியில் உள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

இருபது : வாக்கெடுப்பு இன்று மாலை

அரசியல் நெருக்கடி – பொன்சேகா பதிலடி