உலகம்

பாகிஸ்தானின் பொது தேர்வு இன்று!

(UTV | கொழும்பு) –    இன்று பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதற்காக இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடுத்தடுத்த வழக்குகளில் கைது, அதன் தொடர்ச்சியாக வெடித்த வன்முறைகள் என பாகிஸ்தான் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாடு முழுவதும் காவல் துறையினர், ராணுவ வீரர்கள், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டு ஷாபாஸ் ஷெரிப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அன்வாருல் ஹக் காதரை இடைக்கால பிரதமராக, முன்னாள் பிரதமர் ஷாபார் ஷெரிப், எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் இணைந்து தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் இன்று பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாகிஸ்தானில் தேர்தல் விதிகளின்படி தேர்தல் முடிந்து 14 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் அவசியம்

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

 சூடானில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு