உள்நாடு

பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –    எதிர்வரும் காலங்களில் முட்டை மற்றும் பால் தட்டுப்பாடு ஏற்படும் என சில தரப்பினர் கூறுவது உண்மையில்லை. பாலுக்கோ முட்டைக்கோ தட்டுப்பாடு இருக்காது, ஏனெனில் கால்நடை வளர்ப்பாளர்களை வலுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று கால்நடை மேம்பாட்டு இராஜங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 14,000க்கும் அதிகமான பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மாகாணங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி இது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அண்மையில் பொதுக் கணக்குகள் குழு (COPA) வெளிப்படுத்தியுள்ளது. இந்த பண்ணைகளில் பெரும்பாலானவை சிறிய அளவிலான பண்ணைகள் என்றும், பெரும்பாலானவை விலங்குகள் திருட்டு காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹேரத், வழமையான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, கோழிப்பண்ணை மற்றும் பால் பண்ணையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ‘சனச’ போன்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது பண்ணைகள் மூடப்பட்டதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சில வெளிநாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

“புதிய விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய சுமார் 80,000 இனப்பெருக்க விலங்குகள் தேவை. ஆனால் தொற்றுநோய் மற்றும் பிற சிக்கல்களால் அது 20,000 ஆகக் குறைந்தது. மீண்டும், கால்நடை உணவுகளின் விலை உயர்ந்தது. ஆனால் அரசு விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்கியது. உதாரணமாக, சோளத்தின் மீதான இறக்குமதி வரியை நீக்கினோம். இவ்வாறான நகர்வுகளினால், கால்நடைத் தொழிலை சரியான பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடிந்தது” என்று அவர் மேலும் கூறினார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெரும்பாலான பகுதிகளில் 50 மி.மீக்கு அதிகமான கடும் மழை

ஜனாதிபதி தேர்தல் எப்போது ? நாளை இரவு அறிவிப்பு.

ஆகஸ்ட் 01 முதல் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு