(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிகளை சபிப்பதன் மூலம் அதிலிருந்து மீள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றதின் ஐந்தாவது அமர்வு சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்ளை பிரகடன அறிக்கையினை சபையில் சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றி வருகிறார்.
உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்தன. தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளை எதிர்கொண்டனர். சில சமயங்களில் நெருக்கடியில் இருந்து மீண்டவர், சில சமயங்களில் நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை.
புத்தர் தனக்கே விளக்காக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.நமக்கு நாம் விளக்காக இல்லாவிட்டால் நன்மை செய்ய முடியாது. அது நாட்டுக்கும் நல்லதல்ல.
பணவீக்கம் 50 வீதத்திற்கு அதிகமாகவும் டொலரின் பெறுமதி 380 ரூபாவுக்கும் அதிகமாகவும் இருந்தது. இன்று பணவீக்கம் 4 வீதத்திற்கு குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி 320 ரூபாவாக குறைந்துள்ளது. இவைதான் நாம் ஏற்படுத்திய மாற்றம்.
உலகில் பல நாடுகள் தமது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளை முறையாக உணர்ந்தே அதற்கான தீர்வுகளை கண்டன. ஏனையவர்களை விமர்சித்து எவரும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை.
இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திர தன்மை அடையும் நிலையில் வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தா
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්