உள்நாடு

மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் பலி… 9 மாதக் குழந்தை வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) –  தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வீதியின் அருகே நின்று கொண்டிருந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 9 மாத குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளன

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஜித்- சந்திரிக்கா சந்திப்பு

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்