உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் பெற புதிய பரிசோதனைக்கான!

(UTV | கொழும்பு) –

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக தற்போது பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் உள்நாட்டில் எழுத்துகள் மற்றும் இலக்கங்கள் மாற்றப்படுவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சில அதிகாரிகளின் உதவியுடன் பார்வையற்றவர்கள் இலக்கங்களை மனப்பாடம் செய்து சோதனைகளில் தேர்ச்சி பெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். பார்வையற்றோருக்கு மருத்துவ பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரு அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 8 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தலைவர், அது காட்சிப்படுத்தப்பட்டு அதற்கேற்ப சோதனைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நுகேகொட மற்றும் வெரஹெர ஆகிய கிளைகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருபத்தி நான்கு மாவட்ட அலுவலகங்களிலும் இதே வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவாதம் [நேரலை]

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா