வகைப்படுத்தப்படாத

நாடாளாவிய ரீதியில் தரை வழியாகவும், வான் வழியாகவும் அம்புலன்ஸ் சேவை

(UDHAYAM, COLOMBO) – நாடாளாவிய ரீதியில் தரை வழியாகவும், வான் வழியாகவும் அம்புலன்ஸ் சேவைகளை அமுல்படுத்த ஜேர்மன் உதவ முன்வந்துள்ளது.

ஜேர்மனின் பென்ஸ் நிறுவனமும், ஏயார் பஸ் நிறுவனமும் இதற்கான முதலீடுகளை மேற்கொள்ள இருக்கின்றன. இலவசமான முறையில் இது அமுல்படுத்தவிருக்கிறது.

ஜேர்மன் சென்றுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜேர்மனின் பொருளாதார நிதித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இயற்கை அனர்த்தங்கள், அவசர விபத்துக்கள் என்பனவற்றின்போது, நோயாளர்களை ஏற்றிச் செல்ல ஜேர்மனின் ஏயார் பஸ் நிறுவனம் 24 ஹெலிகொப்டர்களை வழங்கவுள்ளது.

நாடாளாவிய ரீதியில் ஆயிரத்து 50 அம்புலன்ஸ் வண்டிகளும், 240 அனர்த்த வாகனங்களும் இலங்கைக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் அம்புலன்ஸ் சேவையின் ஊடாக இலங்கை மக்களுக்கான பாரிய சேவைகள் இடம்பெறுகின்றன. ஜேர்மன் உதவியுடன் இந்த சேவையை விரிவான முறையில் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குறைந்த வட்டிவீதத்தின் கீழ் இந்த முதலீடு இடம்பெறவிருக்கிறது.

Related posts

தெரேசா மேயின் ஒப்பந்தம் மீளவும் நிராகரிப்பு

கம்மன்பிலவின் எச்சரிக்கை

பூட்டை உடைத்து பாடசாலையை திறக்க உத்தரவு அதிபர் வராததால் கண்டி தெல்தோட்ட பாடசாலையில் சம்பவம்