உள்நாடு

பாணின் எடை குறித்து வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

(UTV | கொழும்பு) –

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரை இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணியின் எடை தௌிவாக காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் நீர் விநியோகம் தடை

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

editor