(UTV | கொழும்பு) –
நாட்டில் தற்பொழுது மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் சாத்தியமில்லை என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதிய மின்சார சக்தி சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் நீக்கப்படாவிட்டால், மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார சக்தி சட்ட மூலம் தொடர்பில் இரண்டு தடவைகள் எழுத்து மூல பரிந்துரை முன்வைக்கப்பட்ட போதிலும் அந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உதாசீனம் செய்து, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றின் அனுமதியுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கள் ஏற்படும் என பராக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්