(UTV | கொழும்பு) –
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வேண்டுமென்றே அதனைத் தவிர்த்திருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්