உலகம்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை!

(UTV | கொழும்பு) –

பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும், அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டனர்.

இவருக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலையடுடுத்து, ஜெப் கான் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய உதவியாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊழல் வழக்கு ஒன்றில், இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி பூஷ்ரா ஆகியோருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கனடா துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி

டெல்லி வன்முறை – ஐ.நா மனித உரிமைகள் கவலை

பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை