உள்நாடு

A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை 2,300 க்கும் மேற்பட்ட பரீட்சை மையங்களில் நடைபெற்றது.
இம்முறை 346,976 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்காக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டலஸுக்கு ஆதரவு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

இன்று முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை