(UTV | கொழும்பு) –
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அறபுக் கல்லூரிகள்,மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயமர்வொன்று இன்று இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் அன்றாட வாழ்க்கையின் போது ஏற்படும் உளநெருக்கீடுகள் மற்றும் அதனை சமாளித்து எவ்வாறு தங்களது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பிலும் மாணவர்களுடன் உரையாடும் போதும் கல்வி கற்றல் நடவடிக்கைகளின் செயற்பாடுகளின் போது செயற்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது
விரிவுரைகளாக வழங்கப்பட்டன. குறித்த செயமர்வுக்கு வளவாளராக மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் கலந்து கொண்டார்.
இதனை சிறுவர் பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.றியால்,முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம்.பஸ்மி உட்பட மௌலவிமார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්