உள்நாடு

திலித்துடன் அவசர சந்திப்பில் தயா ரத்நாயக்க!

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாா். பொரளையில் அமைந்துள்ள மௌபிம ஜனதா கட்சியின் அலுவலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜெனரல் தயா ரத்நாயக்க கடந்த 29 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சகத்யுடன் இணைந்துக்கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தயா ரத்நாயக்கவை கடுமையாக விமர்சித்திருந்தாா்.

இந்த விமர்சிப்பினால் வேதனைக்குள்ளான ஜெனரல் தயா ரத்னநாயக்க இன்று காலை மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் கலந்துரையாடி முக்கிய அரசியல் விடயங்களை பேசியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ஊரடங்கு குறித்த அறிவிப்பு

 வத்தளையில் வாகன விபத்து