உள்நாடு

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்!

(UTV | கொழும்பு) –

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முதல் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் சசிந்த பண்டார தெரிவித்துள்ள அறிக்கயைில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் உடனடியாக ‘வற்’ வரியை குறைக்க வேண்டும். உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக பலர் சிரமப்படுகின்றனர்.விலையேற்றத்தை உடன் குறைக்க வேண்டம். சிற்றுண்டிச்சாலைகளின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். புதிய மாணவர் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச்சட்டம், நிகழ் நிலை காப்புச்சட்டம், சமூக கவளைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டம் போன்ற அண்மைகாலமாகக் கொண்டு வரப்பட்ட அனைத்து புதிய சட்டங்களையும் மீளப் பெற்று, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். மகாப் பொல பாக்கிப் பணம் செலுத்தப்பட வேண்டம். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

நியாயமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புத் தடைகள் நீக்கப்பட வேண்டும்.
சி.சி.டி.வி. களைப் பொருத்தி அதன் மூலம் மாணவர்களது நடவடிக்கைகளை உளவு பார்க்கும் நிலை நீக்கப்பட வேண்டும்.
இலவச கல்வி, இலவச சுகாதாரம் போன்ற துறைகளை ஒழிக்கும் தனியார் கல்விக்கடைகளை உருவாக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும். கல்விக்கான அரச நிதி 6 சதவீதமாக ஒதுக்கப்பட வேண்டும் முதலான பல்வேறு காரணங்களை முன் வைத்து தாம் விரிவுரைகளைப் பகிஷ்கரிப்பதாக எழுத்து மூலம் உபவேந்தருக்கு அறிவித்துள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது

கொரியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

X-Press Pearl சிதைவுகள் அகற்றும் பணிகள் மே மாதம் நிறைவுக்கு