உள்நாடு

மேலும் 878 பேர் கைது !

(UTV | கொழும்பு) –

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் யுக்திய விசேட நடவடிக்கையில் 878 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 649 சந்தேக நபர்களும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 229 பேரும் அடங்குவர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 649 சந்தேக நபர்களில் 6 சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணைகளுக்குட்படுத்தபட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தின் பட்டியலில் இருந்த 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்ட 229 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 26 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான 192 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.
இதன்போது தலைமறைவாக இருந்த 03 சந்தேக நபர்களும், குற்றச் செயல்களுடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த 08 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 134 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கிலோ மற்றும் 200 கிராம் கஞ்சா போதைப்பொருள், 136 கிராம் மாவா போதைப்பொருள், ஒரு கிலோ மற்றும் 100 கிராம் மதன மோதகம், 2,211 போதை மாத்திரைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது

கொரோனா : இதுவரை 20,460 பேர் பூரணமாக குணம்

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் இலஞ்ச ஆணைக்குழுவில்