உள்நாடு

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புசட்டமூலம் குறித்து அமெரிக்க தூதுவர் விமர்சனம்!

(UTV | கொழும்பு) –

பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இணையவழிகுற்றங்களை ஒடுக்குவதற்கு பதில் ஜனநாயகத்தை ஒடுக்குகின்றது என தெரிவித்துள்ளதால் பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை முன்னேற்றகரமானதாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் அதேவேளை இந்த சீர்திருத்தங்கள் குறித்து மக்கள் தெளிவாக அறிந்திருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகசம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைஅரசாஙகம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமானதுஅதேவேளை இந்த சீர்திருத்தங்கள் குறித்து மக்களிற்கு தெளிவாக எடுத்துக்கூறுவதும் அவசியம் இதனால் சட்டமூலங்கள் தாமதமாகலாம் ஆனால் ஆனால் அதன் காரணமாக சிறந்த சட்டமூலங்களும் சீர்திருத்தங்களும் உருவாகும் என அமெரி;க்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் கருத்துக்கணிப்பின்படி இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அது குறித்து 70 வீதமக்கள் அறிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை மோதித்தள்ளிய டிப்பர் வாகனம்

editor

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு