உள்நாடு

SLT பங்கு ஏலத்திற்கு தகுதி பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள்!

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.

அவை சீனாவின் Gortune International Investment Holdings மற்றும் இந்தியாவின் Jio Platforms ஆகிய நிறுவனங்கள். ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23% பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் Jio Platforms மற்றும் சீனாவின் Gortune International Investment Holdings மற்றும் இங்கிலாந்தின் லைகா குழுமத்தின் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் ஆகியவை டெலிகாம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் வெற்றி பெற மாட்டார் – பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைதி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

தேர்தலை கூட நடத்த முடியாத நிலை!

அரச விடுமுறை தினத்தில் ஜனாதிபதி கோரிக்கை