உலகம்

இலங்கையின் சுதந்திரதினத்தன்று – பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி

(UTV | கொழும்பு) –

இலங்கையின் சுதந்திரதினத்தன்று தமிழர்களின்சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனின்மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.

ஈழத்தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்பு குழு சர்வதேசதமிழீழ இராஜதந்திரகட்டமைப்பு தமிழ்இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.

இது குறித்த இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது

“ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை சமமாக நடத்துவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனக்குழுவிற்கு சமத்துவம் வழங்கப்படாத பட்சத்தில்இ சமத்துவம் மற்றும் இறுதியில் பிரிவினைக்கான அதன் உரிமைகோரல்களை வலியுறுத்த உரிமை உள்ளது என்பதை சுயநிர்ணய உரிமை மக்களின் சமத்துவம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது ”

இவ்வரையறைக்குள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் நாள் அன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.

உலகெங்கிலும் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு உரிமைக்குரல் எழுப்பவுள்ள இப் பேரணியானது  இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு உயர்  முன்பாக ஆரம்பித்து நடைபவனியாக செல்லவுள்ளது.

இலங்கை உயர் ஆணைய இல்லத்தின் முன்றலில் இருந்து  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகி ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் நிர்வாகத் தலைமையகம் மற்றும் அரச வதிவிடமாக விளங்கும் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கிச்சென்று பின் அங்கிருந்து பாராளுமன்ற சதுக்கத்தை வந்தடையும்.

பேரணியின் நிறைவில் பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்ள்ஸ் பிரித்தானியப் பிரதம மந்திரி மதிப்புக்குரிய ரிஷி சுனக் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மீளப் பெற்றுத்தருவதில் அவர்களுக்கு உள்ள பொறுப்பின் ஆழத்தை வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அனைத்துலக ஈழத் தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சர்வதேச தமிழீழ இராஜதந்திர கட்டமைப்பு  மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு  ஆகியன இணைந்துஇந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சித்தரவதை முகாமாக இருக்கும் குவான்தனாமோ சிறை

இலங்கை பிரஜைகள் இந்தியாவில் இந்தி மொழியை கற்பதற்கான புலமைப்பரிசில்!

பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி