உள்நாடு

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.

இன்படி புதிய கட்டிட வளாகம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை, ஜனாதிபதியின் வருகையை கண்டித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கொழும்பு கண்டி பிரதான வீதியை மறித்து நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

எவ்வாறாயினும், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற போதிலும், பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்துக்குள் எந்தவொரு தரப்பினரையும் நுழைய அனுமதிக்காமல் நேற்று மாலை வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பண மோசடி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் எச்சரிக்கை!

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”