(UTV | கொழும்பு) –
பாராளுமன்றத்தின் 7 வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன நாளை பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சேவையில் இருந்து ஓய்வுப் பெறவுள்ள படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து,செங்கோல்,படைக்கலச் சேவிதரின் வாள் ஆகியவற்றை புதிய படைக்கல சேவிதருக்கு கையளித்துள்ளார்.
ஓய்வுபெறும் பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் புதிய படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு இன்று பாராளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் 42 வருடங்கள் பாராளுமன்றத்தில் சேவையாற்றி ஓய்வுபெறவுள்ளதால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் இவ்வாறு சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் 6 வது படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் 2018 முதல் படைக்கலச் சேவிதராக சேவையாற்றினார். அதற்கமைய பாராளுமன்றத்தின் 7 வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன நாளை பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர,பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகியோரும் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்களும், பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්