உள்நாடு

இலங்கை – தாய்லாந்துக்கிடையில் விமான சேவைக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –

இலங்கை அரசுக்கும் தாய்லாந்து அரசுக்கும் இடையிலான இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான அங்கீகாரம் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கிடைத்துள்ளது. தாய்லாந்து தரப்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் உடன்பாடும் கிடைத்துள்ளது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தேச இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன்

நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!