உள்நாடு

மின்சார கட்டணத்தை செலுத்த புதிய வழிகள் அறிமுகம்!

(UTV | கொழும்பு) –

வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான பல வழிமுறைகளை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, CEBCare மொபைல் செயலி, இணைய வங்கிச் சேவைகள், CEB இணையத்தளம், தபால் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள், Cargills, Keel’s போன்ற பல்பொருள் அங்காடிகள், MCash போன்ற விழிமுறைகளில் மின் கட்டணங்களை செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வழிமுறைகளில் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் CEB நிலைய அவசர தொலைபேசி இலக்கமான 1987 தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் .மேற்குறிப்பிட்ட புதிய தொழில்நுட்ப வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை பெற முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த புதிய பாடதிட்டம் அவசியம்

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது