(UTV | கொழும்பு) –
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
மாலைதீவில், மொஹமட் முய்சுவின் அரசு சீன சார்பு என்றும், அங்குள்ள எதிர்க்கட்சி இந்தியாவுக்கு ஆதரவானது என்றும் கருதப்படுகிறது. இந்தியாவுடனான உறவு மோசமடைந்து வருவதாக முய்சு அரசை மாலைதீவு எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. நேற்று, மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அமைச்சரவையில் நான்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக மாலைதீவு பாராளுமன்றத்தில் மோதல்கள் வெடித்தன.
இந்த வேறுபாடுகள் மிகவும் வளர்ந்ததால், முய்சு அரசின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්