(UTV | கொழும்பு) –
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று பதவியேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர் , இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர்.
இதேவேளை படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வட மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, கடந்த ஆண்டு வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්