(UTV | கொழும்பு) –
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த திகதியில் சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால் பயணிகள் படகு சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்ப திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்ததன் மூலம் 40 வருடங்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் எடுக்கும் இந்த சேவைக்காக ஒருவழி பயணத்திற்கு 26,750 ரூபாயும் இருவழி பயணத்திற்கு 53,500 ரூபாயும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්