வகைப்படுத்தப்படாத

12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அமுலாகின்றன.

கூடுதலான டெங்கு நோயாளிகள் அடையாளங்காணப்பட்ட மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது சுகாதார அமைச்சின் நோக்கமாகும். இதற்கு அமைவாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இந்த வேலைத்திட்டம் அமுலாகும். இந்தப்பணியில் ஆயிரத்து 800க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல் மட்டக்களப்பு, திருகொணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத் திட்டம் அமுலாகிறது.

இதுவரை 47 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.

Related posts

Germany’s Ursula von der Leyen nominated to lead EU Commission

காலநிலையில் திடீர் மாற்றம்..!

முன்னாள் பெண் அதிபருக்கு 30 ஆண்டு சிறையா?