உள்நாடு

வவுனியாவில் கோர விபத்து!

(UTV | கொழும்பு) –

வவுனியா ஏ9 வீதியில் வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor